தலைவர் 169 படத்தை இயக்குகிறீர்களா என்ற கேள்விக்கு இயக்குனர் தேசிங்கு பெரியசாமி பதிலளித்துள்ளார்.
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி. முதல் திரைப்படமே வெற்றி திரைப்படமாக அமைந்தது, இந்த திரைப்படத்தை பார்த்து விட்டு ரசிகர்கள் மேலும் சில சினிமா பிரபலங்கள் தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர்.
unknown nodeஅந்த வகையில், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை நடிகர் ரஜினிகாந்த் பார்த்துவிட்டு இயக்குனர் தேசிங்கு பெரியசாமி வீட்டிற்கு அழைத்து பாராட்டினார். அப்போதிலிருந்து தற்போதுவரை ரஜினியின் 169- வது படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கப்போவதாக தகவல்கள் பரவி வருகிறது.
unknown nodeசமீபத்தில் கூட தலைவர் 169 படத்தை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ளது உறுதியாகிவிட்டதாகவும், படத்தை AGS நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் பரவி வந்தது.
unknown nodeஇந்நிலையில், கவின் நடிப்பில் உருவாகியுள்ள லிப்ட் படத்தை பார்க்க வந்த தேசிங்கு பெரியசாமியிடம் தலைவர் 169 படத்தை இயக்குகிறீர்களா..? என்ற கேள்வி கேட்கப்பட்டது.. அதற்கு பதிலளித்த அவர்.. தெரியல நடந்தால் நன்றாக தான் இருக்கும்.. ரசிகர்கள் எடிட் செய்யும் போஸ்டர்களை பார்க்கிறேன் சந்தோசமாக இருக்கிறது…அடுத்து என்ன படம் இயக்க போகிறேன் என்று எனக்கே தெரியவில்லை.. இன்னும் 2 மாதம் அல்லது மூன்று மாதங்களில் முடிவு செய்துவிடுவோம்..” என்று கூறியுள்ளார்.