மாநாடு படத்தின் முதல் சிங்கிள் பாடலுக்கான டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் திரைப்படம் மாநாடு. இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். மேலும் பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்கள். மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.
இந்நிலையில் படத்திற்கான முதல் பாடல் வருகின்ற 21 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து இன்று மாலை 6 மணிக்கு முதல் பாடலுக்கான டீசர் வெளியாகும் என்று இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ட்வீட் செய்துள்ளார். இதனால் சிம்பு ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
unknown node