நடிகர் சிம்பு ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக “பத்து தல” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். திரைப்படத்தை இந்த படத்தை நெடுஞ்சாலை படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்குகிறார்.
unknown nodeSilambarasanTR PathuThala [Image Source : Google ]
இந்த திரைப்படத்தில் சிம்புவுடன் நடிகர் கெளதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர்,உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். படத்தில் சிம்பு எஜிஆர் என்ற டான் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில், பத்து தல படத்தின் புதிய அப்டேட் ஒன்று நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
unknown nodestr pathu thala[Image Source : Google ]
அது என்ன அப்டேட்டாக இருக்கும் என ரசிகர்கள் சற்று குழம்பி வந்த நிலையில், தற்போது அது என்ன அப்டேட் என்பதை படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, பத்து தல படத்தின் டீசர் நாளை மாலை 5.31 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளது.
unknown nodeஇந்த அறிவிப்பால் நடிகர் சிம்பு ரசிகர்கள் உற்சாகத்துடன் டீசரை பார்க்க ஆவலுடன் காத்துள்ளனர். மேலும் இந்த திரைப்படம் வருகின்ற மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.