டீசர் இல்லை டிரைலர் தான்....டாக்டர் படத்தின் சூப்பர் அப்டேட்..!

It has been reported that the trailer for the movie Doctor starring Sivakarthikeyan will be released on the 29th.

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் படத்திற்கான டிரைலர் வருகின்ற 29 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர். இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். மேலும் நடிகர் வினை, மற்றும் நடிகர் யோகி பாபு, தொகுப்பாளினி அர்ச்சனா, போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் வருகின்ற மார்ச் மாதம் 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கு டீசர் இல்லை என்றும் படத்திற்கான டிரைலர் வருகின்ற 20 ஆம் தேதி வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதை போல் படத்திற்கான ஆடியோ லான்ச் விழா மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் நடத்தவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதை போல் இன்று நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்த நாள் என்பதால் படத்திலிருந்து ஏதேனும் அப்டேட் வர அதிகவாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.