நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கி வருகிறார். படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.
படத்தில் சிவ ராஜ்குமார், மோகன் லால், ரம்யா கிருஷ்ணன், த்ரிஷா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இவர்கள் நடிப்பதை படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது.
இதனை தொடர்ந்து தற்போது இந்த திரைப்படத்தில் நடிகை தமன்னா நடிப்பதை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முன்னதாகவே படத்தில் தமன்னா ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் பரவியது இதனை தொடர்ந்து தற்போது அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டுவிட்டது.
மேலும் படத்தில் தமன்னா ரஜினிக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாகவம் தகவல்கள் கசிந்துள்ளது. அவர் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளார் அல்லது வேறு எதுவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளாரா என்பதை படம் வெளியான பிறகு தெரிந்துகொள்வோம்.
unknown node