நடிகர் சூர்யா ஜிம்மில் பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.
சூர்யா 42
நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் தனது 42 -வது திரைப்படத்தில் நடித்து வருகிறார. தற்காலிகமாக சூர்யா 42 என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது.
unknown nodeSuriya42 [Image Source: Twitter ]
சூர்யா சினிமா கேரியரிலில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படம் இதுதான். திரைப்படம் கிட்டத்தட்ட பத்து மொழிகளுக்கு மேல் சரியாக உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் படத்திற்கான தலைப்பு என்னவென்ற அப்டேட்டை படக்குழு அறிவிக்கும் என கூறப்படுகிறது.
வெறித்தமான பயிற்சியில் சூர்யா
நடிகர் சூர்யா தனது 42-வது படத்திற்காக ஜிம்மில் வெறித்தனமாக பயிற்சி செய்யும் 17 நொடி கொண்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவில் சூர்யா வேகமாக புல்லப்ஸ் (pullups) உடற் பயிற்சி செய்கிறார். வீடியோவை பார்த்த பலரும் “இந்த வயதில் இப்படி உடற்பயிற்சி செய்வது பாராட்டுக்குரியது” என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
unknown node