திரையரங்குகளில் வெளியாகும் சூரரைப் போற்று...? கொண்டாட்டத்தில் சூர்யா ரசிகர்கள்..!

Surya starrer Sura is set to re-release in theaters in April, similar to the one released on Amazon Frame.

சூர்யா நடிப்பில் அமேசான் பிரேமில் வெளியான சூரரைப்போற்று ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் ரீ ரிலீஸாக உள்ளது.

நடிகர் சூர்யா நடிப்பில் அமேசான் பிரேமில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் தேதி வெளியான திரைப்படம் சூரரைப்போற்று. இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை அபர்ணா முரளி நடித்திருந்தார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத் திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் சிறப்பான விமர்சனத்தை பெற்றது. கடந்த ஆண்டே திரையரங்குகளில் வெளியாகும் என்று திட்டமிட்டிருந்த படக்குழு கொரோனா வைரஸ் பரவல் காரணாமாக ஓடிடியில் வெளியானது.

இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தை திரையங்குகளில் வெளியிட்டு ரசிகர்கள் கொண்டாடுவதற்காக படக்குழுவினர் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்களாம். அதன் படி வருகின்ற ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செய்தி தற்போது சூர்யா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திரையரங்குகளில் வெளியாகும் சூரரைப் போற்று...? கொண்டாட்டத்தில் சூர்யா ரசிகர்கள்..!