மீண்டும் வெளியாகும் அஞ்சான்... கொண்டாட்டத்தில் சூர்யா ரசிகர்கள்..!!

The Surya starrer Anjaan is all set to release on April 12

சூர்யா நடிப்பில் வெளியான அஞ்சான் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 12 ஆம் தேதி ரீ ரிலீசாகாக உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் சூர்யா இவரது நடிப்பில் கடந்த ஆண்டு அமேசான் பிரேமில் வெளியான சூரரைப்போற்று படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்ற நிலையில், அடுத்ததாக தனது 40 வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த நிலையில் கொரோனா வைரஸ் ஏற்பட்டு 1 ஆண்டுகளுக்கு பிறகு பல புதிய திரைப்படங்கள் ரிலீசாகி வருகிறது. மேலும் சில படங்கள் ரீ ரிலீசாகி வருகிறது

அந்த வகையில் , கடந்த 2014 ஆம் ஆண்டு இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் அஞ்சான். இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை சமந்தா நடித்திருந்தார். யுவன் இசையில் வெளியான இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 12 ஆம் தேதி ரீ ரிலீசாகாக உள்ளதாக கூறப்படுகிறது.இதற்கான டிக்கெட் புக்கிங் இன்று முதல் நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.