சூர்யா 40 படத்தில் இணைந்த டாக்டர் பட ஹீரோயின் ...அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

Sunpictures has announced on its Twitter page that actress Priyanka Arul Mohan will star in actor Surya's 40th film

நடிகர் சூர்யாவின் 40 வது திரைப்படத்தில் நடிகை பிரியங்கா அருள் மோகன் நடிக்கவுள்ளதாக சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தனது ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

நடிகர் சூர்யாவின் 40 வது திரைப்படத்தை இயக்குனர் பாண்டியராஜ் இயக்குவுதாகவும் அந்த படத்தை சன்பிக்ச்சர் நிறுவனம் தயாரிப்பதாகவும் கடந்த ஆண்டு அறிவித்திருந்தனர். அதனை தொடர்ந்து டி இமானின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு அவர் சூர்யாவின் 40 வந்து படத்தில் இசையமைப்பார் என்று அறிவித்திருந்தார்கள். இப்படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடிக்கவுள்ளதாக சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தனது ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் தற்போது உற்சாகத்தில் உள்ளார்கள். மேலும் நடிகை பிரியங்கா அருள் மோகன் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சிவகார்திகேயனிற்கு ஜோடியாக டாக்டர் படத்தில் நடித்துமுடித்துள்ளார்.இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

unknown node