சூர்யா 40 படத்தின் படப்பிடிப்பு நிறுத்தம்..!!

It takes patience and determination to succeed in your goals. Avoid speed in your actions.

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக சூர்யா நடித்து வந்த சூர்யா 40 படத்திற்கான படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யா அடுத்தாக தனது 40 வது திரைப்படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்குகிறார். இசையமைப்பாளர் இமான் இசையமைக்கும் இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகனன் நடித்துவருகிறார். இந்த படத்தில் சத்யராஜ், சரண்யா, சூரி, தேவதர்ஷினி, போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. படத்திற்கான பர்ஸ்ட் லுக் டைட்டில் என்று எதுவுமே படத்திலிருந்து வெளியாகாத நிலையில், தற்போது படத்தின் படப்பிடிப்பும் வைக்கப்பட்டுள்ளது. விரைவில் மீண்டும் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கும் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.