Suriya43 : சூர்யாவுக்கு வில்லனாகும் தமன்னா காதலன்! ஜோடியாக நடிக்கப்போவது யார் தெரியுமா?

நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என

suriya 43 movie

நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்பார்கப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில், நடிகர் சூர்யா நடிக்கவுள்ள 43 படத்திற்கான சில தகவல்கள் சமீப காலமாக பரவி படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகிறது.

அந்த வகையில், சூர்யாவின் 43-வது திரைப்படத்தை இதற்கு முன்பு சூர்யாவை வைத்து சூரரைப்போற்று எனும் ஹிட் படத்தை இயக்கி கொடுத்த இயக்குனர் சுதாகொங்காரா தான் இயக்கவுள்ளாராம். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது. தற்காலிகமாக சூர்யா 43 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த சூர்யா 43 திரைப்படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் விஜய் வர்மா நடிக்க கமிட் ஆகியுள்ளாராம். இவர் தஹாத், டார்லிங்ஸ், கால்கூட் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபல நடிகையான தமன்னாவின் காதலரும் கூட, இவர் சூர்யாவுக்கு வில்லனாக நடிக்கவுள்ளதாக பரவும் தகவல் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

மேலும், இந்த சூர்யா 43 திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க வைக்க நடிகை நஸ்ரியாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அது மட்டுமின்றி, படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பிரபல நடிகையான துல்கர் சல்மானிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். ‘

கண்டிப்பாக இவர்கள் எல்லாம் சூர்யா 43 திரைப்படத்தில் நடித்தால் கண்டிப்பாக இந்த படம் எல்லா மொழிகளிலும் பேசப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது. விரைவில் சூர்யா 43 திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.