நடிகர் சூர்யா 42 தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் தனது 42-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக “சூர்யா 42” என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் தேவ் ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.
unknown nodeSuriya42 [Image Source : Google ]
இந்த திரைப்படத்திற்கான தலைப்பு தமிழ்ப்புத்தாண்டு தினத்தையொட்டி ஏப்ரல் 16-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருந்தது. அதனை தொடர்ந்து தற்போது படத்தின் ரிலீஸ் அப்டேட் உடன் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
unknown nodeSuriya42 Update [Image Source : Google ]
அதன்படி, சூர்யா 42 திரைப்படத்திற்கு கங்குவா எனும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படம் அடுத்த ஆண்டு (2024) 10 மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர்.
unknown nodeஇந்த திரைப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில், நீண்ட நாட்களாகவே சூர்யா 42 அப்டேட் கேட்டு வந்த ரசிகர்களுக்கு தற்போது அப்டேட் கிடைத்துள்ளதால் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.