தெறிக்க விடும் சியான் 60 படத்தின் சூப்பர் அப்டேட்...!

Filming for Sion 60 is set to begin next week in Chennai with Pooja.

சியான் 60 படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த வாரம் சென்னையில் பூஜையுடன் தொடங்கப்படவுள்ளது.

நடிகர் விக்ரம் தற்போது இயக்குனர் மணி ரத்தனம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான மீதி படப்பிடிப்பு இன்னும் சில மாதங்களில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து கோப்ரா படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக நடிகர் விக்ரம் ரஷ்யா சென்றுள்ளார். அந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள தனது 60 வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த படத்தில் விக்ரமுடன் அவரது மகன் மற்றும் நடிகரான துருவ் விக்ரமும் இணைந்து நடிப்பதாக கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. கேங்க் ஸ்டார் படமாக உருவாகவுள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ள்ளார். மேலும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித் குமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராக ஷெரேயாஸ் கிருஷ்ணா பணியாற்றவுள்ளதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த வாரம் சென்னையில் வைத்து பூஜையுடன் தொடங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் நடிகை வாணி போஜனும் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.