Thalaivar171 : ஆயிரம் கோடிக்கு பக்கா பிளான் போட்ட சன் பிக்ச்சர்ஸ்! லோகேஷிற்கு ஒத்துழைப்பு கொடுப்பாரா ரஜினி?
ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்ளுக்கு மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வசூலை குவித்து வருகிறது. படம் வெளியாகி 1 மாதங்கள் கடந்தும் ஓடிடியிலும் வெளியாகியும் கூட இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிகொண்டு இருக்கிறது. இந்த வெற்றியை கொண்டாடி தீர்த்து வரும் ரஜினி ரசிகர்களுக்கு மேலும் கொண்டாட்டம் அளிக்கும் வகையில் ரஜினி நடிக்கவுள்ள 171-வது படத்திற்கான அறிவிப்பும் வெளியாகிவிட்டது.
தற்காலிகமாக தலைவர் 171 எனும் தலைப்பு வைக்கப்பட்டு இருக்கும் அந்த திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வளர்ந்து வரும் லோகேஷ் கனகராஜும் முன்னணி நடிகரான ரஜினிகாந்தும் ஒரு திரைப்படத்தில் இணையவுள்ளதால் இந்த படம் வசூல் ரீதியாக பெரிய அளவில் பேசப்பட்டு வெற்றிபெறும் என தெரிகிறது. ஏனென்றால், இதற்கு முன்பு லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று 400 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது.
அதைப்போல ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் 600 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது. இதில் விக்ரம் திரைப்படம் 100 % லோகேஷ் கனகராஜ் படமாக உருவாக்கப்பட்டு இருந்தது எனவே, கமல்ஹாசனும் அவருடைய மனநிலையை தெரிந்துகொண்டு 100 % லோகேஷ் படமாக எடுக்க விட்டுவிட்டார். அவர் கொடுத்த சுதந்திரத்திற்கு ஏற்றதுபோல லோகேஷ் கனகராஜும் படத்தை எடுத்துக்கொடுத்து பிளாக் பஸ்டர் கொடுத்துவிட்டார்.
இந்நிலையில், அதைப்போலவே லோகேஷ்க்கு தலைவர் 171 படத்திலும் முழு சுதந்திரம் கொடுத்து 100 % லோகேஷ் படமாக உருவானால் கண்டிப்பாக ரஜினிக்கும் இருக்கும் மார்கெட்டிற்கு அந்த படம் கண்டிப்பாக 1000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்ய அதிக வாய்ப்புகள் இருக்கிறது. எனவே லோகேஷ் கனகராஜிற்கு சுதந்திரம் கொடுப்பாரா ரஜினி என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
அதாவது, 100 % லோகேஷ் கனகராஜ் படமாக உருவாகப்போகிறதா அல்லது 50 % படமாக உருவாக போகிறதா என்பதை பார்க்கவேண்டும். எப்படி பார்த்தாலும் இவர்கள் இருவரும் இணைந்து செய்யும் இந்த படம் 1000 கோடிகள் வசூல் செய்ய அதிக வாய்ப்புகள் இருக்கிறது எனவே படத்தை தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்ச்சர்ஸ்க்கு பெரிய அளவில் லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ரஜினிகாந்த் தற்போது தனது 170-வது படத்தில் நடிக்கவுள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய்யை வைத்து லியோ திரைப்படத்தை இயக்கி வருகிறார். எனவே, இருவரும் தாங்கள் கமிட் ஆகியுள்ள படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக தலைவர் 171 படத்தில் இணைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.