இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் திரைப்படத்தின் டீசர் வருகின்ற திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்து முடித்துள்ள திரைப்படம் சுல்தான். இந்த திரைப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை ரஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த திரைப்படம் தமிழில் அவருக்கு முதல் திரைப்படமாகும் மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் யோகிபாபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் கடந்த ஆண்டே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் , கொரோனா வைரஸ் பரவல் காரணமாக படத்திற்கான ரிலீஸ் தேதி தள்ளிச்சென்றது.
அதற்குப் பிறகு படத்தில் இருந்து எந்த ஒரு அப்டேட்டும் படக்குழு வெளியிடாமல் இருந்த நிலையில், தற்போது இந்த திரைப்படத்திற்கான டீஸர் குறித்து அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. ஆம், வருகின்ற பிப்ரவரி 1ஆம் தேதி அதாவது திங்கட்கிழமை அன்று மாலை 5 மணிக்கு இந்த திரைப்படத்தின் டீஸர் வெளியாகும் என்று கூறப்படுகிறது இதனால் கார்த்தி ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
unknown node