கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் திரைப்படம் ஏப்ரல் 2 ஆம் தேதி வெளியாகும் என்று டீசரை வெளியிட்டு தெரிவித்துள்ளனர்.
நடிகர் கார்த்தி இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள திரைப்படம் சுல்தான். இந்த திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை ரஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த திரைப்படம் தமிழில் அவருக்கு முதல் திரைப்படமாகும் மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் யோகிபாபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் கடந்த ஆண்டே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் , கொரோனா வைரஸ் பரவல் காரணமாக படத்திற்கான ரிலீஸ் தேதி தள்ளிச்சென்றது.
இந்த நிலையில் இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் திரையரங்கில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து தற்போது இந்த திரைப்படம் ஏப்ரல் 2 ஆம் தேதி வெளியாகும் என்று டீசரை வெளியிட்டு தெரிவித்துள்ளனர்.
unknown node