சுல்தான் படத்தின் இந்தி ரீமேக் உரிமையை கைப்பற்றிய வலிமை தயாரிப்பாளர்..?

Sultan, starring Karthi, is all set to be remade in Hindi. It has been reported that the Hindi remake will be produced by producer Bonnie Kapoor

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் படத்தின் இந்தி ரீமேக்கை உரிமையை பிரபல தயாரிப்பாளனாரா போனி கபூர் வங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சுல்தான். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். எஸ் ஆர் பிரபு தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் விவேக் மேர்வின் இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கான டீசர் கடந்த 1 ஆம் தேதி வெளியானது அதனை தொடர்ந்து படத்திற்கான முதல் பாடலை படக்குழுவினர் வெளியிட்டனர். இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் ஆகவுள்ளதாகவும். அந்த ஹிந்தி ரீமேக்கை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கவுள்ளதாகவும் அதற்கான உரிமையும் வங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.