நடிகை அபர்ணா பாலமுரளியிடம் தவறாக நடந்து கொண்ட மாணவர்.! வைரலாகும் வீடியோ.!

சூரரைப்போற்று படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை அபர்ணா பாலமுரளி தற்போது மலையாளத்தில் சில படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில், தற்போது தங்கம் எனும்

சூரரைப்போற்று படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை அபர்ணா பாலமுரளி தற்போது மலையாளத்தில் சில படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில், தற்போது தங்கம் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷன் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

இந்த திரைப்படத்தின் ப்ரோமோஷனுக்காக கல்லூரி ஒன்றிற்கு அபர்ணா பாலமுரளி படக்குழுவினருடன் சென்றிருந்தார். அப்போது ஒரு மாணவர் மேடையில் ஏறி தவறாக நடந்து கொண்டு அங்கிருப்பவர்களை முகம் சுளிக்க செய்துள்ளார்.

மேடையில் ஏறிய அந்த நபர் அபர்ணாவுக்கு பூ ஒன்றை கொண்டு வந்து கொடுக்க முயன்றார். பூவை கொடுத்துவிட்டு கை கொடுத்து புகைப்படம் எடுக்க அபர்ணாவை இழுத்தார். பிறகு தோளில் கையை போட முயன்றார். பிறகு அப்டியே அபர்ணா நழுவினார்.

இந்த சம்பவம் அபர்ணாவுக்கு சற்று கோபத்தை ஏற்படுத்தியது. ஆனாலும் கோபத்தை வெளியில் காமிக்காமல் சிரித்துக்கொண்டே விட்டுவிட்டார். மாணவன் செய்த இந்த அத்துமீறலான செயலின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் பலர் முன்னிலையில் தவறாக நடந்து கொண்ட மாணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என  கூறி வருகிறார்கள்.

unknown node