வலிமை திரைப்படம் எப்போது ரிலீஸ் தெரியுமா...?

It has been reported that the movie Valaimai starring actor Ajith will be released on May 1 next year on the eve of Ajith's birthday.

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் அடுத்த ஆண்டு மே மாதம் 1 ம் தேதி அஜித் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடவுள்ளதாக தகவல்.

இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் தற்போது நடித்து வரும் திரைப்படம் வலிமை. இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தில் நடிகர் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக ஹூமா குரேஷூ நாயகியாகவும் ,கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளார். மேலும் யோகி பாபு,பேர்லி மன்னி உள்ளிட பலர் நடிக்கின்றனர் . யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தின் சண்டைக் காட்சிகள் மற்றும் ரேஸ் காட்சிகள் ஏற்கனவே படமாக்கப்பட்டதாக கூறப்பட்டது .

மேலும் இந்த வலிமை படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டதி லிருந்து ஒரு அப்டேட் கூட வெளி வராததால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர் .மேலும் பலர் அப்டேட் கேட்டு சமூக வலைத்தளங்களில் கேள்வியும் எழுப்பி வருகின்றனர். ரசிகர்களுக்கு அப்டேட் கொடுக்கும் வகையில் வலிமை படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா சமீபத்தில் தனது இன்ஸ்டா பக்கத்தில் வலிமை படத்தின் இசை பணி தொடங்கியதாக புகைப்படத்துடன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது வலிமை படத்தின் ரிலீஸ் தேதி பற்றி அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது ஆம், வலிமை திரைப்படம் அஜித்தின் பிறந்த அதாவது மே 1ம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.