தோளில் கைபோட்டு தப்பா நடந்துகிட்டாங்க! பிக் பாஸ் நடிகை சொன்ன பகீர் தகவல்!
அதில் இன்னும் சிலர் பெரிய இயக்குனரை வைத்து படம் என்று சொல்லி கமிட்மெண்ட்
கேட்பார்கள். இதேபோன்ற அனுபவம் எனக்கு இரண்டு முறை ஏற்பட்டது. ஒரு 19 வயதில் இந்தி படத்தின் ரீமேக் படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது. இயக்குனர் என்னை அலுவலகத்திற்கு அழைத்தார். அப்போது என் அம்மா கொல்கத்தாவில் இருந்தார். நான் தனியாக இயக்குனர் அலுவலகம் சென்றேன்.
Read more- மம்முட்டியை ஓரங்கட்டி ரூ.100 கோடி வசூலித்த மஞ்சும்மெல் பாய்ஸ்! மலையாளத்தில் புதிய சாதனை…
அவர் என் தோளைப் பிடித்துக் கொண்டு பேசும் விதம் எனக்கு கோபம் வந்தது. அவருக்கு வயதாக இருக்கும் ஆனால், அவர் அப்படி செய்தது எனக்கு எரிச்சலை உண்டாக்கியது. என்னைப் பார்க்கும் விதம் மிகவும் அருவருப்பாக இருந்தது. நான் உடனே என் பர்ஸை எடுத்துக்கொண்டு வெளியே ஓடினேன். ஆனால் காஸ்டிங் கவுச் விவகாரத்தில் தான் ஒருபோதும் ஏமாற்றப்படவில்லை.
READ MORE- அந்த நடிகருடன் காதலில் விழுந்தாரா நடிகை ரிது வர்மா?
இருந்தாலும் அந்த இயக்குனர் என்னிடம் அப்படி நடந்துகொண்டது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. என்னுடைய வழ்கையில் நான் எவ்வளவு பெரிய இடத்திற்கு சென்றாலும் அதனை மட்டும் மறக்கவே மாட்டேன்” எனவும் நடிகை ஸ்ரீஜிதா கூறியுள்ளார். மேலும், இவர் தஷான், மான்சூன் ஷூட்அவுட், லவ் கா தி எண்ட், ரெஸ்க்யூ போன்ற படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.