வாரிசு 'ஆன்மா' கண்கலங்க வைக்கிறது... மனதை உருக்கும் அம்மா பாடல் இதோ...

நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் உருவாகி இருக்கும் “வாரிசு” திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.  இந்த படத்தை ராஜு தயாரித்துள்ளார். படத்திற்கு

நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் உருவாகி இருக்கும் “வாரிசு” திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.  இந்த படத்தை ராஜு தயாரித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

unknown node

VarisuThirdSingle [Image Source: Twitter ]

இந்த திரைப்படத்தை பார்க்க ஆவலுடன் காத்துள்ளனர்.இதற்கிடையில், படத்திற்கான மூன்றாவது பாடலான SoulOfVarisu என்ற அம்மா செண்டிமெண்ட் கொண்ட பாடல் இன்று வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது, அதன்படி தற்போது இந்த பாடல் வெளியாகியுள்ளது.

unknown node

இந்த பாடலை சின்ன குயில் சித்ரா தேவி பாடியுள்ளார். பாடலை எழுத்தாளர் விவேக் எழுதியுள்ளார். பாடலை கேட்கையில் மிகவும் எமோஷனலாக இருக்கிறது. எனவே எல்லாருடைய வாழ்க்கையிலும் இந்த பாடல் ஒன்றிப்போகும் என்று கூறப்படுகிறது. அந்த அளவிற்கு ஒரு சூப்பரான பாடல் வாரிசு படத்திலிருந்து வெளியாகியுள்ளது.

unknown node

Varisu Audio Launch [Image Source: Twitter]

ஏற்கனவே வாரிசு படத்திலிருந்து வெளியான ரஞ்சிதமே, தீ தளபதி ஆகிய பாடல்கள் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தற்போது அடுத்த பாடலும் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். மேலும் வாரிசு திரைப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 24-ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.