விரைவில் ‘பத்து தல’ பிரமாண்ட இசை திருவிழா.! சிறப்பு விருந்தினராக என்ட்ரி கொடுக்கும் சூர்யா.!

Default Image

நடிகர் சிம்பு தற்போது “பத்து தல” திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கான டீசர் கூட நேற்று வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. படம் வருகின்ற மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

PathuThalaTeaser
PathuThalaTeaser [Image Source : Google ]

இதனை தொடர்ந்து  பத்து தல  படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா வருகின்ற மார்ச் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக இருப்பது வேண்டும் என்பதற்காக பல பிரபலங்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

pathu thala audio launch
pathu thala audio launch [Image Source : Google ]

அதில் மிக முக்கியமான ஒரு பிரபலம் என்றால் சூர்யா தான். அட ஆமாங்க பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூர்யா கலந்து கொள்ள உள்ளாராம். ஏனெனில், சூர்யாவின் வரவிருக்கும் திரைப்படமான “சூர்யா 42” படத்தை   ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கிறது.

Suriya Chief Guest For Pathu Thala Audio Launch
Suriya Chief Guest For Pathu Thala Audio Launch [Image Source : Google ]

அதே நிறுவனம் தான் பத்து தல படத்தையும், தயாரிக்கிறது. அதையும் தாண்டி சூர்யாவும், படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும் நெருங்கிய நண்பர்கள் எனவே நட்பு ரீதியாக இருக்க வேண்டும் என்பதற்காக சூர்யாவை அவர் அழைத்துள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. எனவே சூர்யா வருவதே கிட்டத்தட்ட 90 சதவீதம் உறுதி என சினிமாவட்டத்தில் சொல்கிறார்கள்.

suriya 42 update soon
suriya 42 update soon [Image Source : Google ]

மேலும் நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் தனது 42- வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Kerala Govt Pongal holidays
Sanjay Bangar Sanju Samson
pongal (1) (1)
jallikattu price
JammuKashmir
rain heavy