நடிகை அனுஸ்கா பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆவார். இவர் தமிழில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். மேலும், இவர் மற்ற மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், சமீப காலமாக நடிகை அனுஸ்கா குறித்த வதந்தியான செய்திகள் பரவி வந்த வண்ணம் உள்ளது. இதனால், இவர் தனது திருமணம் குறித்து காட்டமான கருத்துக்களை தெரிவித்து வருகிற நிலையில், சமீபத்தில் இவர் பேட்டியில், ‘எனக்கு தனிப்பட்ட வாழ்ககை இருக்கிறது. எனது சொந்த வாழ்க்கையில், சிலர் மூக்கை நுழைப்பது பிடிக்கவில்லை. நான் யாரை திருணம் செய்து கொள்வேன் என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.’ என கூறியுள்ளார்.