வசூலில் மிரட்டும் சக்ரா...! வெளியான 3 நாட்களில் இத்தனை லட்சம் வசூலா..?

Chakra, directed by MS Anandan and starring Vishal, has reportedly grossed Rs 99 lakh in Chennai alone in the first three days of its release.

விஷால் நடிப்பில் வெளியான சக்ரா திரைப்படம் வெளியான 3 நாட்களில் சென்னையில் மட்டும்  99 லட்சம் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் விஷால் நடிப்பில் கடந்த 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் சக்ரா. இந்த படத்தை இயக்குனர் எம்.எஸ்.ஆனந்தன் இயக்கியுள்ளார். மேலும் விஷாலிற்கு ஜோடியாக நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். இந்த படத்தை விஷாலின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் நடிகர் ரோபோ சங்கர், மனோபாலன் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

வெளியான நாளிலிருந்து தற்போது வரை ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தையும் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது. அதனை தொடர்ந்து வெளியான 3 நாட்களில் சென்னையில் மட்டும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது. ஆம், வெளியான 3 நாட்களில் சென்னையில் மட்டும் இந்த படம், 98 லட்சம் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் வார இறுதிக்குள் 1 கோடி வந்துவிடும். இந்த படம் விஷாலிற்கு ஒரு வெற்றிப்படமாக திகழ்கிறது.