அண்ணாத்தையுடன் மோதும் சிவகார்த்திகேயனின் அயலான்...?

Sivakarthikeyan starrer Ayalon and Rajinikanth's Annatha will be released on the same day.

சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படமும் ரஜினியின் அண்ணாத்த படமும் ஒரே நாளில் வெளியாகவுள்ளதாக தகவல்.

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் டாக்டர் மற்றும் அயலான். இதில் டாக்டர் திரைப்படம் வருகின்ற மார்ச் மாதம் 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதனை தொடர்ந்து அயலான் படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் குழம்பி வந்த நிலையில் தற்போது அதற்கான தகவல் ஒன்று கிடைத்துள்ளது. ஆம் அயலான் படம் வருகின்ற தீபாவளி தினத்தில் படக்குழுவினர் வெளியிடவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.

அதைபோல் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகிவரும் அண்ணாத்த படமும் தீபாவளிக்கு வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து இந்த படமுமும் ரஜினியின் அண்ணாத்த படமும் ஒரே நாளில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. மேலும் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற மார்ச் 15 ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

அண்ணாத்தையுடன் மோதும் சிவகார்த்திகேயனின் அயலான்...?