தமிழ் சினிமாவில் இயக்குனராக மட்டுமில்லாமல் நடிகராகவும் கலக்கி வருபவர் எஸ்.ஜே.சூர்யா. இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு படம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. படத்தில் தனுஷ் கோடி என்ற வில்லன் கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா மிரட்டி இருப்பார்.
unknown nodeமாநாடு படத்தின் மூலம் எஸ்.ஜே.சூர்யாவிற்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமானது. இந்த படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பை தொடர்ந்து அடுத்ததாக, சிவகார்த்திகேயனின் டான் படத்தில் கல்லூரி ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
unknown nodeஇந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது. இந்த படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக, நேற்று டான் படத்தின் கொண்டாட்ட விழா நடைபெற்றது.
unknown nodeஇதில் பேசிய எஸ்.ஜே.சூர்யா ” மாநாடு படத்தில் நடித்ததற்கு எனக்கு மாஸ் கிடைத்தது. ஆனால், டான் படத்தில் நடித்ததற்கு மரியாதை கிடைத்தது. இது மிகப்பெரிய சந்தோசம்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் கடைமயை செய், பொம்மை ஆகிய திரைப்படங்கள் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.