செல்வராகவனுடன் எஸ் ஜே சூர்யா.... "கடமையை செய் " ஷுட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் ....!

SJ Surya has posted on his Twitter page the photos taken during the shooting for the film Do Duty.

கடமையை செய் திரைப்படத்திற்கான படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை எஸ்ஜே சூர்யா தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும்,இயக்குனராகவும் வலம் வருபவர் எஸ்ஜே சூர்யா.இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான இறைவி , மான்ஸ்டர் ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.தற்போது இவர் ராதா மோகன் இயக்கத்தில் பொம்மை படத்தில் நடித்து முடித்துள்ளார்.அதனுடன் சிம்புவிற்கு வில்லனாக மாநாடு படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது இவர் புதிய படமொன்றில் கமிட்டாகியுள்ளார் .’கடமையை செய்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் எஸ்ஜே சூர்யாவிற்கு ஜோடியாக பிக்பாஸ் யாஷிகா ஆனந்த் நடிக்கவுள்ளார். மேலும் இந்த படத்தினை ‘முத்தின கத்தரிக்காய்’ பட இயக்குனரான வெங்கட் ராகவன் இயக்கவுள்ளார். கணேஷ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து தற்போது இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை எஸ்ஜே சூர்யா தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டு அனைவருக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

unknown nodeunknown node