தனது தந்தையின் பெயரை தன் மகனுக்கு சூட்டி அழகுபார்த்த சிவகார்த்திகேயன்.!

சிவகார்த்திகேயனுக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு குகன் தாஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயனுக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு குகன் தாஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

சின்னத்திரையில் தொகுப்பாளராக பணியை தொடங்கி தனது திறமையாலும் விடாமுயற்சியாலும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக தற்போது உயர்ந்துள்ளவர் சிவகார்த்திகேயன். இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு தனது உறவினர் ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆராதனா என்ற 7 வயது மகள் உள்ளார்.

இந்த நிலையில், தற்போது மீண்டும் சிவகார்த்திகேயன் ஆர்த்தி தம்பதிக்கு, இரண்டாவதாக கடந்த ஜூலை 12-ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் தனது குழந்தைக்கு தனது தந்தையின் பெயரை சூட்டி அழகுபார்த்துள்ளார். குழந்தைக்கு குகன் தாஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கூறியிருப்பது, ” எங்கள் அன்பு மகனை வாழ்த்திய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்..உங்கள் அன்போடும் ஆசியோடும் “குகன் தாஸ்” என பெயர்சூட்டியிருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

unknown node