மாவீரனாக மாறிய சிவகார்த்திகேயன்.! அசத்தலாக வெளிவந்த அறிவிப்பு.!

நடிகர் சிவகார்த்திகேயனின் 22-வது படத்தை யோகி பாபுவை வைத்து மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்குகிறார். இந்த படத்திற்கு தமிழில் "மாவீரன்" என்றும்

நடிகர் சிவகார்த்திகேயனின் 22-வது படத்தை யோகி பாபுவை வைத்து மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்குகிறார். இந்த படத்திற்கு தமிழில் “மாவீரன்” என்றும் தெலுங்கில் “மஹாவீருடு” என்றும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் சார்பில் அருண் விஸ்வா தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் பரத் சங்கர் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் டைட்டில் டீசர் வெளியிடபட்டுள்ளது.

டீசரில் நடிகர் சிவகார்திகேயன் இதுவரை இல்லாத விதமாக மிகவும் வித்தியாசமான கெட்டப்பில் வருகிறார். டீசரை பார்த்த ரசிகர்களுக்கு படத்தின் மீது எதிர்பார்ப்பு  அதிகமாகியுள்ளது. இதோ அந்த டீசர்.

மேலும் சிவகார்த்திகேயன், தற்போது பிரின்ஸ் படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து ராஜ்குமார் பெரிய சாமி இயக்கத்தில் உருவாகியுள்ள தனது 21-வது படத்திலும் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node