நடிகர் சிவகார்த்திகேயன் இன்று தனது 38-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், அவர் நடித்து வரும் “மாவீரன்” படத்தின் முதல் பாடலை இன்று மதியம் மணிக்கு வெளியீடும் என படக்குழு முன்னதாக அறிவித்திருந்தது.
unknown nodePrinceSK [Image Source : Google ]
அந்த அறிவிப்பை தொடர்ந்து, தற்போது அந்த பாடல் வெளியாகியுள்ளது. பாடலை அனிருத் பரத் சங்கர் என்பவர் இசையயில் பாடியுள்ளார். பாடலை கபிலன் சி.எம்.லோகேஷ் இருவரும் இணைந்து எழுதியுள்ளார்கள்.
unknown nodeஅதைப்போல பாடலில் வரும் லோக்கலான இசையும் சிவகார்த்திகேயனின் செம குத்தாட்டமும் பாடலை கேட்பவர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. எனவே பாடல் கண்டிப்பாக ஹிட் ஆகும் என தெரிகிறது. மேலும் மாவீரன் படத்தை மடோன் அஸ்வின் இயக்குகிறார்.
unknown nodeMaaveeran-Movie [Image Source: Twitter ]
படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை அதிதி சங்கர் நடித்து வருகிறார். மேலும் மாவீரன் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்ததாக கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.