அம்பானி வீட்டு திருமணம்: பாடகி ரிஹானா வாங்கிய பிரமாண்ட சம்பளம்?

Anant Ambani முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோருக்கும் வரும் ஜூலை மாதம் 12-ஆம் தேதி பிரமாண்டமாக திருமணம்

Anant Radhika Wedding rihanna

Anant Ambani முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோருக்கும் வரும் ஜூலை மாதம் 12-ஆம் தேதி பிரமாண்டமாக திருமணம் நடைபெறவுள்ளது. ஏற்கனவே, இவர்களுக்கு கடந்த 2023 ஆம் ஆண்டே ஜனவரி மாதம் திருமணத்திற்கான நிச்சியத்தார்தம் நடைபெற்றது. நிச்சயதார்த்தமே மும்பையில் உள்ள ‘அன்டாலியா ‘இல்லத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.

read more- களைகட்டும் ஜாம்நகர்… அம்பானி வீட்டு திருமணத்துக்கு வருகை தந்த பிரபலங்கள்.!

இந்த நிலையில், அதனை தொடர்ந்து ஜூலை  12-ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. இவர்களுடைய திருமணத்தை முன்னிட்டு முந்தைய நிகழ்ச்சிகள் பிப்ரவரி 28-ஆம் தேதி தொடங்கி தொடர்ச்சியாக மூன்று நாட்கள் நடைபெறுகிறது. குஜராத்தின் பூண்ட ஜாம்நகரில் பிரமாண்டமாக நடைபெற்ற இந்த விழாவில் இந்தியா முழுவதிலும் இருந்தும் உலகின் பிற பகுதிகளிலிருந்தும் 2,000 முதல் 2,500 பிரபலங்கள் கலந்து கொள்வார்கள்.

unknown node

Anant Radhika Wedding rihanna [file image]குறிப்பாக கரீனா கபூர், சைஃப் அலி கான், ரன்வீர் சிங், தீபிகா படுகோன், ஆலியா பட், மகேந்திர சிங் தோனி, சாய்னா நேவால், டிரென்ட் போல்ட், ஹர்திக் பாண்டியா, மார்க் ஜுக்கர்பெர்க், பில் கேட்ஸ், டொனால்ட் டிரம்பின் மகளான இவாங்கா டிரம்ப், என பல பிரபலங்களும் கலந்துகொண்டார்கள். நிகழ்ச்சி பிரமாண்டமாக இருக்கவேண்டும் என்பதால் நிகழ்ச்சிக்கு பிரபல அமெரிக்கன் பாடகியான ரிஹானா அழைக்கப்பட்டு இருந்தார்.

READ MORE –‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தை பார்த்து மெய் சிலிர்த்து…கண் கலங்கிய குணா இயக்குனர்.!

ரிஹானாவும் தனது இசைக்குழுவுடன் வந்து பாடல்களை பாடி நடனம் ஆடி அங்கு வந்த பிரபலங்களையும் பிரமித்து பார்க்க வைத்தார். அந்த அளவிற்கு அவர் பாடிய பாடல்களும் வெகுவாக அனைவரையும் கவர்ந்தது. இது தொடர்பானவீடியோக்களும்சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  ரிஹானா நிகழ்ச்சிக்கு வந்தவுடன் ரசிகர்கள் அவரை கூட்டமாக சூழ்ந்தனர்.

unknown node

Anant Radhika Wedding rihanna [file image]அவர் பாடிய பாடல்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தாலும் இதில் கலந்து கொள்ள அவர் வாங்கிய சம்பளம் அனைவரையுமே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.  அதன்படி, இந்த பிரமாண்டமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பாடகி ரிஹானா சம்பளம் வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 8 முதல் 9 மில்லியன் டாலர்கள் இந்திய மதிப்பின் படி,66 கோடி ரூபாய் முதல் 74 கோடி வரை சம்பளம் வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

READ MORE –தயவு செஞ்சு தவறவிடாதீங்க! ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ பற்றி கார்த்திக் சுப்புராஜ்!

மேலும், இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக கடந்த 2018-ஆம் ஆண்டு முகேஷ் அம்பானியின் மகள் இஷா திருமணம் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பிரபல பாடகியான பியான்ஸ் பங்கேற்றார். அவருக்கு ரு.33 கோடி வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அம்பானி வீட்டு திருமணம்: பாடகி ரிஹானா வாங்கிய பிரமாண்ட சம்பளம்?