இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வரும் ஏப்ரல் 28, 2023 அன்று திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
unknown nodePS2 trailer from today [Image Source : Twitter]
இப்படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் 6.30 மணிக்கு நடைபெறவுள்ளது. படத்தின் டிரைலர் இன்று இரவு 9.30 மணிக்கு வெளியிடபடவுள்ளது.
unknown nodeஇந்த இசை வெளியீட்டு விழாவிற்கு நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு டிரைலரை வெளியிடுவார் என படக்குழு கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தது. அவரை தவிர்த்து படக்குழுவினரான மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான், சியான் விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, ஜெயராம் ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளார்கள்.
unknown nodeSTR IN PS 2 AUDIO [Image Source : Twitter]
இந்த நிலையில் புதிதாக ஒரு சூப்பர் தகவல் பரவி வருகிறது. அது என்னவென்றால், பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் சிலம்பரசன் கலந்துகொள்ளவுள்ளாராம். ஏற்கனவே சிம்பு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் செக்க சிவந்த வானம் திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.