திருமணத்திற்குப் பிறகு பொது இடத்திற்கு வந்த சித்தார்த் – கியாரா அத்வானி தம்பதி.! வைரலாகும் புகைப்படங்கள்.!

கடந்த சில ஆண்டுகளாகவே பாலிவுட் நடிகை கியாரா அத்வானி, நடிகர் சித்தார்த் மல்கோத்ரா காதலித்து வந்த நிலையில், நேற்று ராஜஸ்தானில் உள்ள ஜெய்சால்மர் நகரில் உள்ள

கடந்த சில ஆண்டுகளாகவே பாலிவுட் நடிகைகியாராஅத்வானி, நடிகர் சித்தார்த் மல்கோத்ரா காதலித்து வந்த நிலையில், நேற்று ராஜஸ்தானில் உள்ள ஜெய்சால்மர் நகரில் உள்ள சூர்யகார் என்ற ஹோட்டலில் பெற்றோர்கள் முன்னிலையில், இவர்களுடையதிருமணம் பிரமாண்டமாக  நடைபெற்றது.

unknown node

இவர்களுடைய திருமணத்தில் நெருங்கிய சினிமா பிரபலங்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள். இவர்களுடைய திருமண புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலானது. இதனையடுத்து ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் இணையதளத்தின் மூலம் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

unknown node

SidharthKiaraWedding [Image Source : Twitter]

இந்த நிலையில், கியாரா அத்வானியும் கணவர் சித்தார்த் மல்ஹோத்ராவும் புதன்கிழமை மாலை திருமணம் செய்து கொண்ட பிறகு முதல் முறையாக பொது இடத்தில் காணப்பட்டார்கள். ஆம், புதுமண தம்பதிகளான இவர்கள் ஜெய்சால்மர் விமான நிலையத்தில் ஒன்றாகக் காணப்பட்டனர்.

unknown node

விமான நிலையத்தில் இவர்களை பார்த்த ரசிகர்களும்,  ஊடகத்தினரும் கியாரா அத்வானி, சித்தார்த் மல்ஹோத்ராவை வேகமாக புகைப்படங்கள் எடுக்க தொடங்கினார்கள். பிறகு இருவரும் தங்களுடைய ரசிகர்களுடனும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார்கள். அவர்கள் இருவரும் விமான நிலையத்தில் இருக்கும் புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இவர்கள் இருவரும் தேனிலவுக்காக செல்கிறீர்களா..? அல்லது பட வேலைகளுக்காக செல்கிறார்களா என்பது விரைவில் தெரிய வரும்.