பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரோமோஷனுக்காக கேரளா சென்ற விக்ரம் அங்கு மேளம் அடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பொன்னியின் செல்வன் 2
unknown nodeஇயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, த்ரிஷா, ஐஷ்வர்யா லட்சுமி, ஷோபிதா, பார்த்திபன், சரத்குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் 2 வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
ப்ரோமோஷன் தீவிரம்
unknown nodeபொன்னியின் செல்வன் 2 படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இதனை முன்னிட்டு படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. படக்குழு கேரளா, கொச்சி என பல இடங்களுக்கு சென்று படத்தை ப்ரோமோஷன் செய்து வருகிறார்கள்.
மேளம் அடித்த விக்ரம்
பொன்னியின் செல்வன் 2 படத்தின் ப்ரோமோஷனுக்காக கேரளாவில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் விக்ரம் படக்குழுவினருடன் கலந்துகொண்டார். அப்போது மேடையில் கேரளாவின் பிரபலமான மேளம் செண்ட மேளம் அடிக்கப்பட்டுக்கொண்டு இருந்தது.
unknown nodeஇதனை பார்த்த சியான் விக்ரம் விறு விறுவென மேடைக்கு சென்று அங்கு மேளம் அடித்துக்கொண்டிருந்தவரிடம் இருந்து குச்சியை வாங்கி கொண்டு மேளம் அடித்தார். இதனை பார்த்த அங்கிருந்த ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்தனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.