ஒரு காலத்தில் ஸ்டார் ஹீரோயினாக ஜொலித்தார் ஸ்ரேயா சரண். டோலிவுட்டின் அனைத்து டாப் ஹீரோக்களுடனும் நடித்து மாபெரும் ஹிட் அடித்த இந்த நடிகை தற்போது தனது இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கியுள்ளார். குறிப்பாக சமீபத்தில் வெளியான கப்சா படத்தில் கூட இவர் முக்கியமான கதாபத்திரத்தில் நடித்திருந்தார்.
unknown nodeதிருமணத்துக்குப் பிறகு சினிமா கேரியருக்கு சிறிது இடைவெளி கொடுத்த இவர், தன் அழகை கொஞ்சம் கூட இழக்கவில்லை என்றே கூறலாம். நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் எவ்வளவு அழகாக இருந்தாரோ, அதே உடலமைப்பை பராமரித்து வருகிறார்.
unknown nodeதினம் தினம் புகைப்படங்களை வெளியீட்டு அதன் மூலம் மீண்டும் வெள்ளித்திரையில் பட வாய்ப்புகள் தேடி வருகிறார். இந்நிலையில், ஸ்ரேயா சரண் ஐட்டம் பாடல் ஆட தயாராகிவிட்டார். அதுவும் சிரஞ்சீவியுடன். ஆம், அவர் நடித்து வரும் லேட்டஸ்ட் படமான போலா ஷங்கர் படத்தில் ஸ்ரேயா ஐட்டம் பாடலில் நடனம் ஆடவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.
unknown nodeஇந்த பாடலில் நடனம் ஆட ஸ்ரேயா 1 கோடி சம்பளம் கேட்டு படத்தின் தயாரிப்பாளர்களை அதிர வைத்துள்ளார். இதனால், படக்குழு அவரை வைத்து பண்ணலாமா? வேறு நடிகையை அணுகலாமா? என்ற ஆலோசனையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.