பூஜையுடன் தொடங்கிய "காத்துவாக்குல ரெண்டு காதல்" படப்பிடிப்பு..!

The shooting of the upcoming romantic movie 'Kathuvakkula Rendu' directed by Vignesh Sivan has started today with Pooja.

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகவுள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ள திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இந்த படத்தில் நடிகை நயன்தாரா மற்றும் சமந்தா நடிக்கவுள்ளனர். இந்த திரைப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாதம் காதலர் தினத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்டிருந்தார். படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் தொடங்க திட்டமிட்டிருந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.

மேலும் தற்போது ரசிகர்களை உற்சாக படுத்தும் வகையில்  இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது என்று படகுழுவினர் அறிவித்துள்ளனர். இந்த படத்தை தயாரிப்பாளர் லலித் குமார் தயாரிக்கவுள்ளார். மேலும் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

unknown nodeunknown node
பூஜையுடன் தொடங்கிய "காத்துவாக்குல ரெண்டு காதல்" படப்பிடிப்பு..!