அதிர்ச்சி...அஜித் ரசிகர் பலி...'துணிவு' கொண்டாட்டத்தில் நிகழ்ந்த சோகம்.!

நடிகர் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் இன்று அதிகாலை 1மணிக்கு தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. அதிகாலையிலே அஜித் ரசிகர்கள் திரையரங்கிற்கு

நடிகர் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் இன்று அதிகாலை 1மணிக்கு தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. அதிகாலையிலே அஜித் ரசிகர்கள் திரையரங்கிற்கு சென்று ஆட்டம் ஆடி படத்தை கொண்டாடி தீர்த்து விட்டனர்.

இந்நிலையில், சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் படத்தை பார்க்க பல அஜித் ரசிகர்கள் குவிந்தனர், அப்போது அஜித் ரசிகர் பரத் எனும் 19-வயது இளைஞர் அங்கிருந்த  லாரி ஒன்றின் மீது ஏறி நடனம் ஆடியுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக திடீரென பரத்குமார் தவறி ரோட்டில் விழுந்தார்.

இதனால் முதுகு தண்டில் பலத்த காயம் ஏற்பட்டதை அடுத்த பரத் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.