சுருட்டப்பட்ட பாய்க்குள் வந்த ஷிவானி – கண்டுகொள்ளாத பாலாஜி!

Shivani, who was evicted from the Bigg Boss house, is now being recalled, but Balaji is standing as if he is not looking.

பிக் பாஸ் வீட்டுக்குள் வெளியேற்றப்பட்ட ஷிவானி தற்போது மீண்டும் வரவழைக்கப்பட்டு உள்ளார், ஆனால் பாலாஜி பார்த்தும் பார்க்காதது போல நின்று கொண்டிருக்கிறார்.

கடந்த 100 நாட்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன்4 நிகழ்ச்சி இன்னும் இரு தினங்களில் இறுதிக்கட்டத்தை எட்டவுள்ள நிலையில், தற்பொழுது பிக்பாஸ் வீட்டிற்குள் 5 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். ஆரி, ரம்யா, சோம், பாலாஜி மற்றும் ரியோ ஆகிய ஐந்து பேர்தான் இருக்கிறார்கள். நேற்று கேப்ரியல்லா 5 லட்சம் பணத்தை பெற்றுக் கொண்டு வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இந்நிலையில் கடந்த இரு தினங்களாக பிக் பாஸ் வீட்டுக்குள் வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் பலரும் வரவழைக்கப்பட்டுள்ளனர். ஆனால் ஷிவானி அண்மையில்தான் வெளியேற்றப்பட்டதால் அவர் அழைக்கப்படாமல் இருந்தார். இந்நிலையில் இன்று ஸ்டோர் ரூமை திறந்து பார்க்கையில் பாய் வந்திருக்கிறது என்று எட்டிப்பார்த்தால் சுருட்டபட்ட பாய்க்குள் ஷிவானி இருக்கிறார். சந்தோஷத்தில் அனைவரும் வந்து கட்டியணைத்து பேசினாலும், பாலாஜி கண்டுகொள்ளாதது போல தான் இருக்கிறார். இதோ அந்த வீடியோ,

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)