4 ஆண்டுகளுக்கு பிறகு ஷாருக்கான் நடித்த’பதான்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோன் நடித்திருந்தார். படத்தை யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
unknown nodePathan Box Office [Image Source : Twitter]
இந்த திரைப்படம் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் படம் ஷாருக்கானுக்கு மிகப்பெரிய பிளாக் பஸ்டர் வெற்றியை கொடுத்த திரைப்படம் என்று கூறப்படுகிறது.
unknown nodePathan Box Office [Image Source : Twitter]
இந்த நிலையில், படம் தற்போது உலகம் முழுவதும் 1000 கோடி வசூல் செய்து பாலிவுட் சினிமாவில் புதிய சாதனை படைத்துள்ளது. இதுவரை இந்தியில் வெளியான எந்த திரைப்படமும் இவ்வளவு வசூல் செய்ததில்லை. முதல் முறையாக 1000 கோடி வசூல் செய்த இந்தி திரைப்படம் என்ற சாதனையை பதான் படைத்துள்ளது.
unknown nodeJawan [Image Source : Google ]
மேலும் பதான் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஷாருக்கான் அடுத்ததாக இயக்குனர் அட்லீ இயக்கும் ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் வரும் ஜூன் 2-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.