பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தற்போது பதான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தை சித்தார்த் ஆனந்த் என்பவர் இயக்கியுள்ளார். படத்தில் தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் விஷால் மற்றும் ஷேகர் இசையமைத்துள்ளார்கள்.
unknown nodePathaanTrailer [Image Source : Google]
இந்த திரைப்படம் வரும் ஜனவரி 25-ஆம் தேதி தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு படத்திற்கான டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. டிரைலரில் வரும் அதிரடி ஆக்சன் காட்சிகள் ஷாருக்கான் பேசும் வசனங்கள் மற்றும் தீபிகா படுகோன் நடித்த ஆக்சன் காட்சிகள் என அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
unknown nodeமேலும் இதில் மற்றோரு சுவராசியமான தகவல் என்னவென்றால், இதுவரை மற்ற படங்களின் டிரைலரை வெளியிடாத விஜய் முதன் முறையாக ஷாருக்கானுடன் இருக்கும் நட்புக்காக பதான் படத்தின் தமிழ் ட்ரைலரை தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
unknown nodeJAWAN TEAM [Image Source : Google]
இதனை பார்த்த பலரும் தளபதி நாங்க இதை எதிர்பார்க்கவே இல்லை என கருத்துக்களை கூறி வருகிறார்கள். மேலும், அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் படத்திலும் விஜய் ஒரு கெஸ்ட் ரோலில் நடிப்பதாக தகவல்கள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.