பிரபல பாலிவுட் நடிகரான ஷாருக்கான் தற்போது இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் “பதான்” என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை யஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் படப்பிடிப்புப் விறு விறுப்பாக முழுவேகத்தில் நடந்து வருகிறது.
unknown nodeஇந்த திரைப்படத்தில் ஜான் ஆபிரகாம், தீபிகா படுகோனே, டிம்பிள் கபாடியா, அசுதோஷ் ராணா போன்ற பலர் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விஷால் தத்லானி, சேகர் ரவ்ஜியானி ஆகியோர் இணைந்து இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்கள்.
unknown nodeஇந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. கடந்த 2018- ஆம் ஆண்டுக்கு பிறகு ஷாருக் கான் நடிப்பில் படம் எதுவும் திரைக்கு வரவில்லை. கடைசியாக “ஜீரோ” படம் 2018-ஆம் ஆண்டு வெளியானது. இதனையடுத்து, இதனால் ” பதான்’ படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
unknown nodeஇந்த நிலையில் ஷாருக்கான் சினிமாவிற்கு வந்து 30 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். அவருக்கு ரசிகர்கள் சினிமா பிரபலங்கள் என பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதனையடுத்து, யஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் பதான் படத்தின் (GLIMPSE)-ஐ வீடியோவை வெளியிட்டுள்ளது.
unknown nodeவீடியோவில் ஷாருக்கான் மிரட்டலான கொடூர லுக்கில் கையில் துப்பாக்கியுடன் வருகிறார். அதில் வரும் பின்னணி இசை ரசிகர்களை வெகுவாக ஈர்தது என்றே கூறலாம். இதற்கிடையில், ஷாருக்கான் அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்திழும் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு, ஜூன் 2-ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடதக்கது.
unknown node