மத உணர்வுகளை புண்படுத்தியதாக திரைப்பட நடிகை டாப்ஸி மீது அளிக்கப்பட்டுள்ளது.
நடிகை டாப்ஸி கடந்த மார்ச் 14-ஆம் தேதி தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வீடியோ ஒன்றை வெளியீட்டு இருந்தார். அந்த வீடியோவில் பேஷன் நிகழ்ச்சி செல்வதற்காக சிவப்பு நிற கவர்ச்சியான உடை ஒன்றை அணிந்திருந்தார். அந்த வீடியோவும் இணையத்தில் மிகவும் வைரலானது.
unknown nodeஇதனையடுத்து, அந்த வீடியோவில், நடிகை டாப்ஸி வெளிப்படைத்தன்மை உடைய ஆடையை அணிந்திருந்தார் எனவும், லட்சுமி தேவியை சித்தரிக்கும் வகையில் கழுத்தில் நெக்லஸையும் அணிந்திருந்தார் எனவும் பிரபல அரசியல் கட்சி எம்எல்ஏ-வின் மகன் ஏக்லவ்யா சிங் கவுர் என்பவர் டாப்ஸி மீது மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
unknown nodeTaapseePannu [Image Source : Google ]
புகாரில் “லக்மேயில் நடந்த ரேம்ப் வாக்கின் போது வெளிப்படும் ஆடையுடன் ‘லட்சுமி தேவி’ இருக்கும் லாக்கெட்டை அணிந்து மத உணர்வுகளையும், ‘சனாதன் தர்மத்தின்’ உருவத்தையும் புண்படுத்தியதற்காக நடிகை டாப்ஸி பன்னுவுக்கு எதிராக புகார் அளித்தோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
unknown nodeTaapsee-Pannu- [Image Source: Google }
மேலும், இந்த புகார் குறித்து தற்போது சத்ரி புரா காவல் நிலையத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. திடீரென டாப்ஸி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது அவருடைய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.