தந்தையிடம் செம திட்டு….அந்த விஷயத்துக்கு மட்டும் மாதம் ‘1 லட்சம்’ செலவு செய்யும் டாப்ஸி.!
நடிகர் டாப்ஸி பன்னு ஒவ்வொரு மாதமும் ஒரு உணவியல் நிபுணருக்கு (dietician) எவ்வளவு செலவு செய்கிறார் என்பதை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய டாப்ஸி ” என்னுடைய தந்தை பணத்தை செலவு செய்ய சற்று யோசிப்பவர். பணத்தை சேமித்த பிறகும், அவர் தனக்காக செலவிடுவதில்லை.
நான் என்னுடைய உடலை சரியாக வைத்து கொள்ளவேண்டும் என்பதற்காக ஒரு மாதம் உணவியல் நிபுணருக்கு (dietician) 1 லட்சம் வரை செலவு செய்கிறேன். இவ்வளவு செலவு பண்ணினதற்காக என்னுடைய தந்தை என்னைத் அதிகமாக திட்டுவார். ஆனால் நான் சினிமாத்துறையில் இருக்கிறேன். எனவே, என் வாழ்க்கையில் நான் எங்கே இருக்கிறேன் என்பதைப் பொறுத்து எனது உணவுமுறை தொடர்ந்து மாறுகிறது.
4 அல்லது 5 வருடங்களுக்குப் பிறகு, உங்கள் உடலும் மாறுகிறது. இந்தத் தொழிலில், நம்மில் பெரும்பாலோருக்கு ஒரு நிபுணரின் ஆலோசனை தேவைப்படுகிறது, எந்த நகரம் அல்லது எந்த நாட்டில் இருக்கிறோம் என்பதைப் பொறுத்து, நமக்கு என்ன உணவு சிறந்தது என்பதைச் சொல்லுங்கள். இப்படி செலவு செய்வதை பற்றி பார்த்தால், ஒரு நடிகைக்கு வேறு என்ன முதலீடு இருக்க முடியும்.
நான் இப்படி ஒரு மாதத்திற்கு 1 லட்சம் செலவு செய்வது என்னுடைய அம்மாவிற்கும், அப்பாவிற்கு சுத்தமாக பிடிக்காது. இருந்தாலும் இது ஆடம்பரமான செலவு அல்ல, இது ஒரு தேவை” என்று கூறியுள்ளார். மேலும் நடிகை டாப்ஸி தற்போது ஷாருக்கானுடன் டன்கி எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.