செம சூப்பர்...ஹீரோ அவதாரம் எடுக்கும் லோகேஷ் -அனிருத்... புது படத்தின் அதிரடி அப்டேட் இதோ..!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் இருவரும் திரைப்படம் ஒன்றில் நடிகர்களாக நடிக்கவுள்ளதாக கோலிவுட் சினிமாவட்டாரத்தில் சூடான புதிய தகவல்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் இருவரும் திரைப்படம் ஒன்றில் நடிகர்களாக நடிக்கவுள்ளதாக கோலிவுட் சினிமாவட்டாரத்தில் சூடான புதிய தகவல் பரவி வருகிறது. இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் இந்த திரைப்படத்தை பிரபல சண்டை பயிற்சி இயக்குனர்களான இரட்டையர்கள் அன்பு அறிவு இயக்கவுள்ளார்களாம்.

unknown node

ஏற்கனவே, அன்பு அறிவு இருவரும் ராகவலரன்ஸை வைத்து ஒரு திரைப்படம் இயக்கவிருந்தார்கள். பிறகு சில  காரணங்களால் அந்த படத்தை இயக்கமுடியாமல் போய்விட்டது. எனவே, தற்போது மீண்டும் இருவரும் ஒரு படத்தை இயக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

unknown node

அன்பு அறிவு இயக்கத்தில்  லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத் நடிக்கவுள்ள படத்தின் தகவலை உறுதிப்படுத்தும் வகையில் சக நடிகரான சமுத்திரக்கனி டிவிட்டரில் அவர்களுடைய புகைப்படங்களை வெளியீட்டு “வாழ்த்துக்கள் செல்லங்களே….வெல்வோம்” என கூறியுள்ளார். இதன் மூலம் இது உறுதியாகியுள்ளது.

unknown node

மேலும் லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய் நடிக்கும்  லியோ திரைப்படதை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் தான் இசையமைத்து வருகிறார். படத்தில் ஸ்டன்ட் காட்சி இயக்குனர்களாக அன்பு அறிவு தான் பணியாற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.