தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜயின் மகன் சஞ்சய் விஜய் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளதாக ஒரு தகவல்கள் பரவி வருகிறது. ஏற்கனவே சஞ்சய் விஜய் ஒரு படத்தை இயக்கவுள்ளதாகவும், அவர் ஒரு படத்தை இயக்ககும் சில புகைப்படங்களும் இணையத்தில் கசிந்து மிகவும் வைரலானது.
unknown nodevijay son [Image Source : Twitter]
அதனை தொடர்ந்து செம மாஸான ஒரு தகவல் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், சஞ்சய் விஜய் பிரபல இயக்குனரான சுதாகொங்கரா இயக்கத்தில் உருவாகும் ஒரு படத்தில் நடிப்பதன் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளாராம்.
unknown nodeSudha Kongara Prasad And Vijay Son [Image Source : Twitter]
அதன்படி, எழுத்தாளர் நரேன் எழுதிய இரண்டு கதைகளை சுதா கொங்கரா வாங்கியதாகவும், அதில் ஒரு கதையை படமாக இயக்க விஜயின் மகன் சஞ்சய் விஜய்யை வைத்து இயக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து நடிகர் விஜய் இடமும் அவரிடம் மகனிடமும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாம். பேச்சு வார்த்தை முடிந்து சம்மதம் தெரிவித்துவிட்டால் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
unknown nodeDirector Sudha Kongara [Image Source: Twitter ]
மேலும், இயக்குனர் சுதா கொங்கரா தற்பொழுது பாலிவுட்டில் நடிகர் அக்ஷய் குமார் வைத்து சூரரைப்போற்று படத்தின் ஹிந்தியை ரீமேக் செய்து வருகிறார். படத்தின் வேலைகள் மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில், அவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் வீட்டில் சிகிச்சை எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.