இசையமைப்பாளர் அனிருத் தற்போது பல பெரிய படங்களுக்கு மட்டுமே இசையமைத்து வருகிறார். இதற்கிடையில், சில இடங்களில் இசை கச்சேரியும் நடத்தி மக்களை தனது இசையால் மகிழ் வித்து வருகிறார். அந்த வகையில், கடந்த ஆண்டு கூட கோவையில் ஒரு இசை கச்சேரி வைத்திருந்தார்.
unknown nodeanirudh music concert [Image Source : Twitter]
அந்த இசை கச்சேரியை பார்ப்பதற்கு மக்கள் கூட்டம் ககூட்டமாக கூடினார்கள் என்றே கூறலாம். எனவே அனிருத் இசை கச்சேரி என்றால், கண்டிப்பாக இசை கச்சேரிகளுக்கான டிக்கெட்கள் அனைத்தும் 30 நிமிடத்தில் விற்று தீர்ந்து விடும். அந்த அளவிற்கு மார்க்கெட் உச்சத்தில் அனிருத் தற்போது இருக்கிறார்.
unknown nodeOnceUponATime tour in Kerala [Image Source : Twitter]
இந்த நிலையில், அனிருத் இசை கச்சேரி அடுத்ததாகOnceUponATimeஎன்ற பெயரில் வருகின்ற ஜூன் 24-ஆம் தேதி கேரளாவின் கொச்சியில் நடைபெறவுள்ளது. இந்த இசை கச்சேரியை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் சுதன் மற்றும் விஜயின் மேலாளர் ஜெகதீஸ் ஆகியோர் இணைந்து நடத்துகிறார்கள்.
unknown nodeAnirudh Ravichander Singing [Image Source: Google]
இதுவரை எவ்வலாவோ இசையமைப்பாளர்கள் இசை கச்சேரி நடத்திருப்பார்கள். ஆனால், அனிருத் கொச்சியில் நடத்தும் இந்த இசை நிகழ்ச்சி தான் இதுவரை இந்தியாவில் மிவும் பிரம்மாண்டத்தின் உச்சம் தொடும் அளவிற்கு நடைபெற போகிறதாம். அதற்கான ஏற்பாடுகள் தான் தற்போது மும்மரமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் அனிருத் விரைவில் பெங்களூர் மாநிலத்திலும் ஓர் இசை கச்சேரி நடத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கூடுதல் தகவல்
அனிருத் இசையில் வெளியாகவுள்ள டாப் படங்கள்
1.ரஜினிகாந்தின் -ஜெயிலர்
2.உலகநாயகன் கமல்ஹாசனின் – இந்தியன் 2
3.தளபதி விஜயின் – லியோ
4.அஜித்தின் – AK62
5.ஷாருக்கானின் – ஜவான்
6.ஜூனியர் என்டிஆரின் – NTR30
7.தனுஷின் – D50