நடிகர் தனுஷ் தற்போது வாத்தி படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் அருண்மதேஷ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
unknown nodeCaptain Miller [Image Source: Twitter ]
இந்த படத்தை தொடர்ந்து தனுஷ் அடுத்ததாக சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். மேலும், இதற்கிடையில் ஏற்கனவே, தனுஷ் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பார் என தகவல் வெளியாகி இருந்தது.
unknown nodeDhanush New Movie [Image Source : Google]
அந்த படம் குறித்து இயக்குனர் எச்.வினோத் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” ‘சதுரங்க வேட்டை’ மாதிரி ஒரு கதையை தனுஷிற்காக உருவாக்கி உள்ளேன். அதை அவரிடமும் சொல்லியுள்ளேன். அந்த கதையும் அவருக்கு பிடித்தது.
unknown nodeH Vinoth And Dhanush [Image Source: Twitter ]
இதனால் ஹெச்.வினோத், தனுஷ் காம்போவில் ஒரு படம் வெளியாவது இதன் மூலம் உறுதியாகியுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், எச்.வினோத் துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்த படத்தின் கதையை எழுதி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.