இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் சூர்யாவின் 40 வது திரைப்படத்தில் நடிகர் சத்யராஜ் இணைந்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்வீட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நடிகர் சூர்யாவின் 40 வது திரைப்படத்தை இயக்குனர் பாண்டியராஜ் இயக்குவுதாகவும் அந்த படத்தை சன் பிக்சர்ஸ்நிறுவனம் தயாரிப்பதாகவும் கடந்த ஆண்டு அறிவித்திருந்தனர். அதனை தொடர்ந்து டி இமான் இசையமைக்கும் இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடிப்பதாக நேற்று அறிவித்தனர். இதனை சூர்யா ரசிகர்கள் கொண்டாடினார்கள்.
இந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்டுகிறது. நேற்று இந்த படத்தில் நடிகை பிரியங்கா அருள் மோகன் நடிப்பதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது இந்த படத்தில் நடிகர் சத்யராஜ் இணைந்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்வீட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
unknown node