இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் எம்ஜிஆர் மகன். இந்த திரைப் படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடிகை மிருணாளினி ரவி நடித்துள்ளார். மேலும் நடிகர் சமுத்திரக்கனி, சத்யராஜ், சரண்யா, பொன்வண்ணன், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இசையமைப்பாளர் ஆண்டனி தாஸ் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கான புதிய அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது, ஆம் இந்த படத்திற்கான இசை இன்று முதல் என்றும் படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி வெளியாகும் என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதனால் சசிகுமார் ரசிகர்கள் தற்போது உற்சாகத்தில் உள்ளார்கள்.
unknown node