ஒரு காலகட்டத்தில் நடிகர் சரத்குமார் வில்லன் ஹீரோ என கலக்கி கொண்டு இருந்தார். மக்கள் இதனால் அவரை சுப்ரிம் ஸ்டார் எனவும் பாசத்துடன் அழைத்தனர். அந்த அளவிற்கு ரஜினி, கமல் ஒரு பக்கம் மாஸ் படங்களை கொடுத்து கொண்டிருந்த நிலையில், சரத்குமார் எல்லா வகையான திரைப்படங்களிலும் நடித்து கலக்கி கொண்டு இருந்தார். இவர் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 1990-ஆம் ஆண்டு வெளியான ‘புரியாத புதிர்’ திரைப்படத்தில் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அவர் நடித்த கதாபாத்திரம் வேண்டுமானால் சிறிய கதாபாத்திரம் தான். ஆனால், அவருடைய கதாபாத்திரமும் அந்த சமயம் பெரிய அளவில் பேசப்பட்டது. ஆனால், இந்த படத்தில் நடிக்க முதலில் சரத்குமார் தயாராக இல்லாயாம். ஏனென்றால், இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோது சரத்குமார் காயம் காரணமாக வீட்டில் எழுந்திருக்க முடியாமல் பேசக்கூட முடியாத நிலையில் இருந்துள்ளாராம்.
ஏனென்றால், இயக்குனர் பாலசந்தர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கும்போது நடிகர் சரத்குமாருக்கு காயம் ஏற்பட்டுவிட்டதாம். படப்பிடிப்பின் போது ஒரு விபத்தில் மேல் இருந்து 65 உயரத்தில் இருந்து கீழே விழுந்து அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதாம். அந்த சமயமே சரத்குமார் கையில் கிட்டத்தட்ட 15 கும் மேற்பட்ட படங்கள் வைத்திருந்தாராம். பிறகு இவருக்கு விபத்து ஏற்பட்ட செய்தி வெளியே தெரிய இனிமேல் நடிக்கவே மாட்டார் அவரால் நடிக்கவும் முடியாது என தகவல் பரவ தொடங்கி விட்டதாம்.
பிறகு சரத்குமார் நடிப்பதாக கமிட் ஆன படங்களின் தயாரிப்பாளர்கள் தங்களுடைய பணத்தை கொடுங்கள் என கேட்க அவை அனைத்தையும் சரத்குமார் திருப்பி கொடுத்துவிட்டாராம். அந்த சமயத்தில் தான் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் சரத்குமாரை பார்க்க வந்தாராம். சரத்குமாருக்கு அடிபட்ட காரணத்தால் அவரால் பேசமுடியாமல் இருந்ததால் ஒரு பேப்பரில் உங்களுக்கும் நான் பணம் கொடுக்கணுமா? என சரத்குமார் எழுதி கேட்டுள்ளாராம்.
அதற்கு இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இல்லை எனக்கு பணம் வேண்டாம் நீங்கள் நடிக்கவேண்டும் இந்த படத்தில் என்று கூறியுள்ளார். என்னால் இந்த சூழலில் எப்படி நடிக்க முடியும் என சரத்குமார் கேட்டுள்ளார். அதற்க்கு கே.எஸ்.ரவிக்குமார் எவ்வளவு நாள் வேண்டுமானாலும் ஆகட்டும் உங்களுக்கு சரியான பிறகு நான் எடுக்கிறேன். அதுவரை நான் காத்திருக்கிறேன். நீங்கள் தான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்கவேண்டும் என சரத்குமாரிடம் கே.எஸ்.ரவிக்குமார் கூறிவிட்டாராம்.
பிறகு, இதனை கேட்ட சரத்குமாருக்கு கண்கள் எல்லாம் கலங்கிவிட்டதாம். அதன் பின், அவருக்கு உடல் நலம் சரியான பிறகு படத்தில் நடித்துக்கொடுத்தாராம். புரியாத புதிர் படமும் விமர்சன ரீதியாக வெற்றிபெற்றது. அந்த சமயமே இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 28 லட்சத்தில் எடுக்கப்பட்டது. கொலைத் திரில்லர் கதையம்சத்தை வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் ரஹ்மான், ரகுவரன், ஆனந்த் பாபு, ரேகா, சித்தாரா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.
தொடர்ச்சியாக கமர்ஷியல் படத்தை இயக்கி வந்த கே.எஸ்.ரவிக்குமார் முதன் முறையாக த்ரில்லர் கதையை கையில் எடுத்தார். படம் பார்க்கும்போது அவருடைய உழைப்பு தெரியும். இந்த புரியாத புதிர் படம் விமர்சன ரீதியாக வெற்றிபெற்றாலும் வசூல் ரீதியாக சுமாரான வெற்றியை தான் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
